நான்கு பேர் அரைசதம்.. டாக்கா டெஸ்டில் மிரட்டும் இலங்கை அணி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.
டாக்காவில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி 365 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லித்தன் தாஸ் 141 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், ரஹிம் 175 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி தரப்பில் ரஜிதா 5 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர்கள் ஒஷாடா பெர்னாண்டோ 57 ஓட்டங்களும், கேப்டன் கருணரத்னே 80 ஓட்டங்களும் விளாசினார்.
Photo Credit: ICC
Photo Credit: AFP
அதன் பின்னர் வந்த குசால் மெண்டிஸ் மற்றும் ரஜிதா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும், 5வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஏஞ்சலோ மேத்யூஸ் - தனஞ்சய டி சில்வா இணை 102 ஓட்டங்கள் குவித்தது. டி சில்வா 58 ஓட்டங்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
Photo Credit: AFP/Munir uz ZAMAN
3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 58 ஓட்டங்களுடனும், சண்டிமல் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், எபடோட் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Photo Credit: AFP