அவுஸ்திரேலியா-இலங்கை மோதும் டி20 போட்டி தடைபட வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இலங்கையின் இடைக்கால பயிற்சியாளர் ருமேஸ் ரத்நாயக்க, முதலாவது டி20 போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
வானிலை முன்னறிவிப்பின்படி, போட்டி நடக்கும் நேரத்தில் 74% முதல் 81% வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளைய போட்டிக்காக பச்சை நிற ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ருமேஸ் ரத்நாயக்க, இலங்கை அணி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறினார்.
அதுமட்டுமின்றி, நாளைய போட்டிக்கு அணி நன்கு தயாராக உள்ளதாக ருமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர் குசால் மெண்டிஸின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் (7 நாட்கள்) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.