பயிற்சியாளர் சமிந்தா வாஸ், வீரர்கள் இசுரு உதான, ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரோனா! வங்க தேச-இலங்கை இடையேயான ஒரு நாள் தொடர் நடப்பதில் சிக்கல்
வங்க தேசத்ததிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி நேற்று இரவு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மே 23ம் திகதி இன்று டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நேற்று இரு அணிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிடிவில் இலங்கை பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் மற்றும் வீரர்கள் இசுரு உதான, ஷிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வங்க தேச அணியிலும் சிலருக்கு தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொற்று உறுதியான பயிற்சியாளர் உட்பட இரண்டு வீரர்களுக்கு 2வது முறையாக RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோரனை முடிவை பொறுத்து வங்க தேச-இலங்கை ஒரு நாள் தொடர் நடைபெறுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2வது பரிசோதனையில் பயிற்சியாளர் சமிந்தா வாஸ் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாக தகவல்கள் வௌயாகியுள்ளது.
அதே சமயம் ஷிரான் பெர்னாண்டோவுக்கு 2வது பரிசோதனையிலும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வங்க தேசம்-இலங்கை இடையேயான ஒரு நாள் தொடர் திட்டமிட்ட படி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.