சுழலில் தெறிக்கவிட்ட தீக்ஷணா! அவுஸ்திரேலியாவை சுருட்டி வாகைசூடிய இலங்கை
கொழும்பில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது.
சரித் அசலங்கா சதம்
முதலில் ஆடிய இலங்கை அணி சரித் அசலங்காவின் சதத்தால் (127) சரிவில் இருந்து மீண்டு 214 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அசிதா பெர்னாண்டோ அதிர்ச்சி கொடுத்தார்.
அவரது ஓவரில் மேத்யூ ஷார்ட் டக்அவுட் ஆக, மெக்கர்க் 2 ஓட்டங்களில் அசிதாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கோனொலியை 3 ஓட்டங்களில் தீக்ஷணா வெளியேற்ற, அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 12 ஓட்டங்களில் வெல்லலாகே ஓவரில் அவுட் ஆனார்.
தீக்ஷணா மிரட்டல்
அடுத்து தீக்ஷணா பந்துவீச்சில் லபுஷேன் (15) ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரி (Alex Carey) வெற்றிக்காக போராடினார். 41 ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் அசலங்கா ஓவரில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து சியான் அபோட், ஆரோன் ஹார்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அபோட்டை 20 ஓட்டங்களில் தீக்ஷணா வெளியேற்ற, எல்லிஸ் டக்அவுட் ஆனார். 32 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹார்டி lbwயில் ஹசரங்கா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
கடைசி விக்கெட்டாக ஸ்பென்சர் ஜான்சன் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 165 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜம்பா 20 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதன்மூலம் இலங்கை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மஹீஷ் தீக்ஷணா (Maheesh Theekshana) 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ, வெல்லாலகே தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
Charith Asalanka's fightback inspires Sri Lanka to a win in Colombo 👏#SLvAUS 📝: https://t.co/5yPD8pHYzk pic.twitter.com/9eAJNIPROV
— ICC (@ICC) February 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |