வங்கதேசத்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை! 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
டாக்காவில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 23ஆம் திகதி தொடங்கிய போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி 365 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 506 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சை சமாளிக்க முடியாவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தாஸ், ஷகிப் ஆகியோர் மற்றும் அரைசதம் அடித்த நிலையில் வங்கதேசம் 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 6 விக்கெட்டுகளையும், ரஜிதா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Photo Credit: AFP
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 29 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. அதிரடியாக 3 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.