அடுத்தடுத்து அவுட்டான இந்திய வீரர்கள்! அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை அணி... இதே நாளில் செய்த ஒரு சாதனை
ஆகஸ்ட் 1, 2004 கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் இந்த நாளில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த நிகழ்வு நடந்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகின்றது.
இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தலைவர் மார்வன் அட்டப்பட்டு 65 ரன்களும், குமார் சங்ககாரா 53 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 203 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது, அந்த அணியின் சச்சின் டெண்டுல்கர் மட்டும் 74 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சந்தனா மூன்று விக்கெட்களும், ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக அட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு பிறகு நடைபெற்ற 2008 மற்றும் 2014 ஆசியை கோப்பைகளையும் இலங்கை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.