அயர்லாந்து அணியை தூள் தூளாக நொறுக்கிய இலங்கை! பயிற்சி போட்டியில் மிரட்டல்
டி20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
புளோரிடாவில் நடந்த போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது இலங்கை அணி. முதலில் துடுப்பாடிய இலங்கை 8 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ஓட்டங்களும், ஹசரங்கா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி, இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவரில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கர்டிஸ் காம்பர் 26 ஓட்டங்களும், அணித்தலைவர் பால் ஸ்டிர்லிங் 21 ஓட்டங்களும் எடுத்தனர். தசுன் ஷானகா 4 விக்கெட்டுகளும், தீக்ஷணா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |