40 ரன்னில் சுருண்ட அணி! மரண அடி கொடுத்த இலங்கை
மகளிர் ஆசியக்கிண்ண தொடர் போட்டியில் இலங்கை அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.
தம்புள்ளையில் நடந்த மகளிர் ஆசியக்கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் மலேசியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய அணித்தலைவர் சமரி அதப்பத்து 69 பந்துகளில் 119 ஓட்டங்கள் விளாசினார். அனுஷ்கா 31 ஓட்டங்களும், ஹர்ஷிதா 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
A ton to remember!?
— Female Cricket (@imfemalecricket) July 22, 2024
Chamari Athapaththu dominates the attack with a magnificent hundred in the Women's T20 Asia Cup.#CricketTwitter #WomensAsiaCup2024pic.twitter.com/GAHkfNH8uU
பின்னர் களமிறங்கிய மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எல்சா ஹண்டர் (10) தவிர ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனதால், மலேசிய அணி 40 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை தரப்பில் ஷாஷினி 3 விக்கெட்டுகளும், காவ்யா கவிந்தி, கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
MASSIVE WIN for our Lionesses! ??? We've crushed Malaysia by 144 runs and secured our spot in the #WomensAsiaCup2024 semi-finals!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 22, 2024
This is SL's biggest-ever Women's T20I win by the margin of runs! #GoLionesses
? This team is on FIRE! ? pic.twitter.com/EcKr7ZO3tI
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |