கம்பீர வெற்றியுடன் உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறிய இலங்கை! துவம்சமான நெதர்லாந்து
டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது கடைசி போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
அசலங்கா 46
செயிண்ட் லூசியாவில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அசலங்கா 21 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 46 ஓட்டங்கள் விளாசினார்.
குசால் மெண்டிஸ் 46 (29) ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 34 (26) ஓட்டங்களும் எடுத்தனர். வான் பீக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
சுருண்ட நெதர்லாந்து
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 16.4 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 31 (23) ஓட்டங்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 31 (24) ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கையின் தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளும், ஹசரங்கா மற்றும் பத்திரனா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தனது கடைசி போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka sign off the #T20WorldCup with a comfortable win over Netherlands ?#SLvNED: https://t.co/O50ERowweA pic.twitter.com/EXn0nFSx8s
— ICC (@ICC) June 17, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |