நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை! 12 ஆண்டுகளுக்கு பின் முத்திரை பதிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
மார்க் சாப்மேன் 76
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மார்க் சாப்மேன் 76 (81) ஓட்டங்களும், மிட்ச் ஹே 49 (62) ஓட்டங்களும் எடுத்தனர். தீக்ஷணா, வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 5 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து நிசங்கா 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, கமிந்து மெண்டிஸ் டக்அவுட் ஆனார்.
நங்கூர ஆட்டம்
குசால் மெண்டிஸ் (Kusal Mendis) மட்டும் நங்கூரம் போல் நின்று ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 8வது விக்கெட்டுக்கு தீக்ஷணாவுடன் கைகோர்த்த மெண்டிஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.
இலங்கை அணி 46 ஓவரில் 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 74 (102) ஓட்டங்களும், தீக்ஷணா 27 (44) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி 12 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |