17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சாம்பியனான இலங்கை அணி! பாகிஸ்தானை வீழ்த்தி மிரட்டல்
ஹாங்காங்கில் நடந்த சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸ்
6 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சிக்ஸஸ் தொடர் ஹாங்காங்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவரில் 72 ஓட்டங்கள் எடுத்தது. முகமது அக்லாக் 20 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசினார்.
Sealed with a *SIX*! ⚡
— FanCode (@FanCode) November 3, 2024
Sri Lanka won their 2nd Hong Kong Sixes Cup with this massive hit!#HongKongSixesonFanCode #ItsRainingSixes pic.twitter.com/hrgFuiogkp
இலங்கையின் லக்ஷன் மற்றும் ரத்னாயகே தலா 2 விக்கெட்டுகளும், விமுக்தி, மதுஷன்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை அணி சாம்பியன்
பின்னர் ஆடிய இலங்கை அணி 5 ஓவரிலேயே 3 விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சந்துன் வீரக்கொடி 13 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதற்கு முன் 2007ஆம் ஆண்டில் முதல் முறையாக இலங்கை சாம்பியனானது. அதன் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் மகுடம் சூடியுள்ளது.
🇱🇰🏆 Champions Once Again! 🏆🇱🇰
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) November 3, 2024
What a performance by our boys in Hong Kong! We've just clinched the Hong Kong Sixes title for the second time, beating Pakistan by 3 wickets with an over to spare! 🔥🏏#HongKongSixes #SriLankaCricket pic.twitter.com/wkNkMG3cLu
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |