இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் பிரித்தானிய வர்த்தக திட்டம்: 92 சதவீத பொருட்களுக்கு சுங்கவரி நீக்கம்
பிரித்தானியாவின் 'வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில்' பயனடையும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று.
பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம்
பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (Developing Countries Trading Scheme-DCTS) கட்டணக் குறைப்புகளையும் எளிமையான வர்த்தக விதிமுறைகளையும் வழங்குகிறது.
இத்திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரும் பயனடையும் இலங்கை
பிரித்தானிய அரசு செயல்படுத்தும் இந்த திட்டமானது, 'உலகில் மிகவும் தாராளமான முன்னுரிமை வர்த்தக திட்டங்களில் ஒன்று' என்று அழைக்கப்படுவதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடையும் 65 நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா விளங்குவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton தெரிவித்தார்.
இலங்கையின் 92% பொருட்களுக்கு சுங்கவரி இல்லை!
DCTS திட்டத்தால், இப்போது இலங்கை அதன் 92% பொருட்களுக்கு சுங்கவரியின்றி பிரித்தானியாவுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் - இது பிரித்தானிய சந்தையில் இலங்கை தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
UKTP திட்டத்தில் இலங்கை
அதுமட்டுமின்றி, பிரித்தானியாவின் வர்த்தக கூட்டாண்மை திட்டம் (UKTP) விரிவடைந்து இப்போது இலங்கையை உள்ளடக்கியுள்ளது. UKTP திட்டம் கிட்டத்தட்ட ஏற்றுமதி செய்யத் தயாராக இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது.
இத்திட்டம் முதன்மையாக இலங்கையின் SME-களுக்கு வர்த்தக ஊக்குவிப்பு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்.
இது இலங்கை உற்பத்தியாளர்களின் தெரிவுநிலையை மேம்படுத்துவதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவாற்றலை வழங்குவதுடன், புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கு வசதியாக இருக்கும்.
UK’s Developing Countries Trading Scheme, UK Trade Partnerships Programme, Sri Lanka, Sri Lanka Exports
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |