80 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி! போட்டுத்தாக்கிய மூவர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சொதப்பிய வீரர்கள்
ஹராரேயில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்க, குசால் மெண்டிஸ் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிசங்கா 8 ஓட்டங்களில் பிராட் ஈவன்ஸ் ஓவரிலும், நுவனிந்து பெர்னாண்டோ ஒரு ரன்னில் முஷரபாணி ஓவரிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
மிரட்டிய மூவர்
பின்னர் கமில் மிஷாரா 20 (20) ஓட்டங்களில் பிராட் ஈவன்ஸ் (Brad Evans) பந்துவீச்சில் கிளீன்போல்டு ஆனார். சிக்கந்தர் ரஸா தனது மிரட்டலான சுழற்பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் (0), அசலங்காவை (18) வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் விக்கெட்டுகளை பறிகொடுக்க, இலங்கை அணி 17.4 ஓவரில் 80 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பிராட் ஈவன்ஸ், சிக்கந்தர் ரஸா தலா 3 விக்கெட்டுகளும் , ப்ளெஸ்ஸிங் முஷரபாணி 2 விக்கெட்டுகளும், சீன் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |