இலங்கையின் 27 ஆண்டுகால தாகம் தீருமா? இந்திய அணியுடன் இன்று மோதல்
இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை இன்று வெற்றி பெற்று சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடைசி ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி டை முடிந்ததைத் தொடர்ந்து, டி20 தொடரை இழந்த இலங்கை அணி இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது.
எனவே இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எகிறியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை, இலங்கை அணி கடைசியாக 1997ஆம் ஆண்டில் வென்றது.
தாகம் தீருமா?
அதன் பின்னர் 27 ஆண்டுகளாக இருதரப்பு தொடரில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் பட்சத்தில் இலங்கை அணி சாதனை படைக்கும்.
கடந்த போட்டியில் ஜெஃப்ரே வண்டார்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அவரது பந்துவீச்சு இலங்கை அணிக்கு கூடுதல் பலமாக உள்ளதால் இறுதிப்போட்டிக்கு பரபரப்பு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |