இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகள்: அதிர்ச்சியூட்டும் காரணங்கள்!
இலங்கையில் நாளுக்கு நாள் பேருந்து விபத்துக்கள் அதிகரித்துவருகின்றது.
இரு தினங்களுக்கு முன் மன்னம்பிட்டிய பகுதியில் ஒரு பெருத்து விபத்துக்குள்ளாகி 12 அப்பாவி பயணிகள் உயிரிழந்தனர். மாரு நாளே நூரலியா மற்றும் அனுராதபுரத்தில் இரண்டு பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு இலங்கையில் பல பகுதிகளில் தொடர்ந்து பேருந்து விபத்துக்கள் நடப்பதற்கு என்ன காரணம்? பேருந்து சாரதி ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இங்கே.
சமீபத்தில் நடக்கும் பேருந்து விபத்துகளுக்கு முதல் முக்கிய காரணம் என்று அவர் கூறுவதாவது, சாரதிகளுக்கு போதிய அளவு அனுபவம் இல்லை. அதன்பிறகு, அதிவேகம். சாரதிகள் அதிவேகத்தில் பேருந்தை இயக்குகின்றனர். ஆனால் சமயத்தில் கியரை கண்ட்ரோல் செய்து பெருந்தாகி நிறுத்தும் திறமை அவர்களுக்கு இல்லை.
அவர்களில் சிலர் போதைப்பொருக்கு அடிமையானவர்கள். பொலிஸார் சாரதிகள் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுகின்றனரா என்று மட்டும் தான் பார்க்கின்றனர். ஆனால், சிலர் கேஜி, கஞ்சா, ஐஸ், குடு போன்ற பிற போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி இருப்பவர்கள் ஆபத்து என வரும் சமயத்தில் பேருந்தை கட்டுப்படுத்தமுடியாது.
இவற்றுக்கு மேலாக, பேருந்து விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அது தான் ரேஸ். தனியார் பேருந்துகள் வருமானம் பார்ப்பதற்காக போட்டிபோட்டுக்கொண்டு பயணிகளை ஏற்றிச்செல்ல முந்திக்கொண்டு செல்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
மேலும், பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டுவது, பார்வையை மறைக்கும்வகையில் அலங்காரம் செய்வது, 2 அடிக்கு சாமி சிலைகள் வைப்பது என இதுபோன்ற செயல்களும் விபத்துகளுக்கு சிறிய காரணமாகிறது என அவர் கூறுகிறார்.
இதுகுறித்து முழு தகவல் கீழே வீடியோவாக காணவும்:
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |