இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? கேப்டன் தனஞ்செயா கூறிய விடயம்
லார்ட்ஸில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மான்செஸ்டரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முன்னேறும் என அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனஞ்செய டி சில்வா
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "டெஸ்ட் வெற்றியை பெற வேண்டியதைப் பற்றியது இது. எங்கள் நாட்டிற்கு இது (வெற்றி) நிறைய கொடுக்கும். அதை விட முக்கியமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நாங்கள் புள்ளிகளைப் பெற வேண்டும்.
இந்தப் போட்டியில் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஓல்டு டிராஃபோர்டிலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், செயல்படுத்த நாங்கள் தவறிவிட்டோம்.
நாங்கள் எங்கள் திட்டங்களில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, பதும் நிசங்கா தற்போது அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |