கனடாவுக்கு இலங்கையர்களைக் கடத்த முயன்ற விவகாரம்... தேசிய புலனாய்வு முகமையின் சமீபத்திய நடவடிக்கை
சட்ட விரோதமாக இலங்கையர்களை கனடாவுக்கு கடத்த முயன்ற விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருடைய ஜாமீனை ரத்து செய்வதற்காக தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA), நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசூல், சதாம் உசேன், Andul Mohitu மற்றும் சாக்ரட்டீஸ் ஆகிய நால்வர் மீது, சட்ட விரோதமாக இலங்கையர்களை கனடாவுக்கு கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
ஆனால், சிறப்பு நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
அதை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதிட்ட சட்டத்தரணியான பிரசன்ன குமார் என்பவர் (Prasanna Kumar P), குற்றத்தின் தீவிரத்தன்மையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது தவறு என்றும், ஜாமீன் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் போலியானவை என்றும், அதுவே பெரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.