தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது
கடந்த 5ஆம் திகதி ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க பலர் சென்றனர்.
அவர்களில் 14 பேர் எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அபராதத்துடன் விடுதலை
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், இலங்கை மன்னார் நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை, ரூ.50,000 அபராதத்துடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அபாரத் தொகையை செலுத்தினால் மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |