வரலாற்றிலேயே மோசமான படுதோல்வி! இந்திய கிரிக்கெட் அணியிடம் வீழ்ந்த இலங்கை... முக்கிய உத்தரவு
இந்தியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இலங்கை அணியிடம் அநாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை - இந்தியா கிரிக்கெட் போட்டி
இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இலங்கை அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது மிக மோசமான தோல்வியாகும். இந்நிலையில் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து இலங்கை அணியிடம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கேட்டுள்ளது.
AFP
அறிக்கை அளிக்க வேண்டும்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வியை சந்தித்துள்ளது. இது எப்படி நேர்ந்தது என்பது குறித்து அணியின் மேலாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் மற்றும் அணியின் மேலாளர் ஆகியோரது கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த அறிக்கை 5 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.