லங்கா பிரீமியர் லீக் தொடர்: சுரேஷ் ரெய்னா வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா?
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பெயர் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் ரெய்னா புறக்கணிப்பு
சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா வெளிநாட்டில் நடக்கும் கிரிக்கெட் டி20 லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
எப்படி இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறதோ, அதேபோல இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் ஜூலை 31ம் தேதி இலங்கையில் 4-வது லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இத்தொடரில் பங்கு பெறும் வீரர்களின் ஏலப் பட்டியலில் சுரேஷ் ரெய்னா பெயர் எல்பிஎல் ஏலத்தின் 11வது செட்டில் இடம்பெற்றிருந்தது.
இத்தொடருக்கான ஏலத்தை சாரு சார்மா நடத்தினார். அப்போது, 11வது செட் பட்டியலில் இடம்பெற்றிருந்த அத்தனை வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் குறிப்பிடப்பட்டன. ஆனால், சுரேஷ் ரெய்னாவின் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரெய்னாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏலத்தை நடத்திய சாரு மர்மா, சுரேஷ் ரெய்னா பெயரை மறந்தாரா, இல்லை வேண்டுமென்றே ரெய்னா புறக்கணிக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இது தொடர்பாக சுரேஷ் ரெய்னா தரப்பிலிருந்தோ அல்லது இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்தோ எந்த அறிக்கையிலும் வெளியாகவில்லை. அறிக்கைகள் வெளியிட்டபின்னர்தான் உண்மை வெளியாகும்.
Suresh Raina's name was sixth in the list, but his name was not called. He was in the same list as Imam Ul Haq, Rassie van der Dussen, Hazratullah Zazai etc and his base price was $50,000.
— shazil Ali Khan (@Worldsp07235448) June 14, 2023
Indian media reporting that he didn't enter his name in the auction. Strange! #LPLAuction pic.twitter.com/8grCpHbzCU
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |