உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க புறப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... வெளியான புகைப்படங்கள்
டி20 உலகக்கோப்பை மற்றும் ஓமனில் நடக்கும் போட்டியில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை அணி, ஓமன் கிரிக்கெட் அணியுடன் இரு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி இலங்கை ஓமானனுடன் தனது முதல் போட்டியை அக்டோபர் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டியை 09 ஆம் திதியும் விளையாடுகிறது.
போட்டிகளின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை அணி திரும்பும். இதற்காக தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
? Sri Lanka T20 World Cup squad led by Dasun Shanaka left the island to take part in a limited overs series in Oman & thereafter will proceed to the UAE for the #T20WorldCup. pic.twitter.com/4ezdAbiRrY
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 4, 2021