ஐசிசியின் முடிவால் ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ச்சியான அரசாங்கத் தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், அரசு இடைக்கால குழு அமைத்து நிர்வகித்து வருகிறது.

இதன் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியாவிற்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
6 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர், 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததால், நேரடியாகவும் சுற்றுலா உள்ளிட்டவை மூலமும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுமார் 20 மில்லியன் டொலர்(இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.656 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழப்பது இது முதல் முறை இல்லை.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நிர்வாகக் கவலைகள் காரணமாக ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை இடைநீக்கம் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்தை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |