அனைத்து அற்புதமான மனிதர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இலங்கை கிரிக்கெட் வாரியம்
இலங்கை கிரிக்கெட் வாரியம் புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்திய அணியுடன் விளையாடும் தொடர் குறித்தும் ட்வீட் செய்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டப்பட்டு வருகிறது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதள வாயிலாகவும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், 'அனைத்து அற்புதமான மனிதர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ஏராளமான மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை 2023 வழங்கும் என நம்புவோம். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஜனவரி 3ஆம் திகதி தொடங்குகிறது. 2023 கிரிக்கெட்டிற்கு யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள்?' என கூறியுள்ளது.
Happy New Year to all you wonderful people!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 31, 2022
We hope 2023 brings you lots of joy and success.🎉
The ODI and T20 series between India and Sri Lanka will commence on January 3, 2023.
Who's ready for Cricket in 2023? pic.twitter.com/4X5U650kDj
டி20 தொடர்
- முதல் போட்டி - வான்கடே, மும்பை (ஜனவரி 3)
- இரண்டாவது போட்டி - மகாராஷ்டிரா மைதானம், புனே (ஜனவரி 5)
- மூன்றாவது போட்டி - சவுராஷ்டிரா மைதானம், ராஜ்கோட் (ஜனவரி 7)
ஒருநாள் தொடர்
- முதல் போட்டி - பர்சபரா மைதானம், கவுகாத்தி (ஜனவரி 10)
- இரண்டாவது போட்டி - ஈடன் கார்டன், கொல்கத்தா (ஜனவரி 12)
- மூன்றாவது போட்டி - கிரீன்பீல்ட் மைதானம், திருவனந்தபுரம் (ஜனவரி 15)