இங்கிலாந்து அணி தோல்வி அருகே வரும் என நினைத்தோமா? இந்திய அணியை மனதார பாராட்டி தள்ளிய இலங்கை வீரர்கள்
லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் 1986, 2014-ம் ஆண்டுக்கு பிறகு புகழ்பெற்ற இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது.
What a effort from Indian Bowlers…Best pack for any condition any surface i have seen…
— ?????? ???????????? (@IamDimuth) August 16, 2021
Well done @BCCI super effort & well played @root66 #IndvsEng #WTC23 #WTC #ENGvsIND
இந்த சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இந்திய அணியை வேறு நாட்டை சேர்ந்த வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் இந்திய அணியை பாராட்டியுள்ளனர்.
திமுத் கருணரத்னேவின் பதிவில், இந்திய பந்துவீச்சாளர்களிடமிருந்து என்னவொரு அருமையா முயற்சி! சிறப்பாக ஆடினார்கள். வெல்டன். நீங்களும் நன்றாக விளையாடினீர்கள் ஜோ ரூட் என பதிவிட்டுள்ளார்.
Test cricket at its best! Who thought that @englandcricket would be on the losing side at the start of day 05? @BCCI with a brilliant comeback to clinch a test classic! Kudos ?#ENGvIND
— Jeevan Mendis (@jeevanmendis) August 16, 2021
ருசல் அர்னால்ட் பதிவில், உண்மையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது என பதிவிட்டுள்ளார்.
ஜீவன் மெண்டீஸ் பதிவில், சிறந்த தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்! 5ஆம் தொடக்கத்தின் போது இங்கிலாந்து அணி தோல்வியின் பக்கம் இருக்கும் என யாராவது நினைத்தோமா? அற்புதமாக மீண்டு வந்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Well played India... really well played.. #ENGvIND Great game guys
— Russel Arnold (@RusselArnold69) August 16, 2021