இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு திட்டம்: வெளியான முக்கிய செய்தி
இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பொய்யான தகவல்
இலங்கையில் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டம் தொடர்பான டெண்டர்கள் வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கமளித்துள்ளார்.
அதில், யாருக்கும் இதுவரை எந்தவொரு டெண்டர்களும் வழங்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் இந்த செயல்முறை கொள்முதல் அளவில் தொடர்ந்த வண்ணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த மின்னணு கடவுச்சீட்டு டெண்டர் நடைமுறைகள் முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே தொடங்கப்பட்டவை. இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இ-பாஸ்போர்ட் திட்டத்தின் பொது விசை உள்கட்டமைப்பு (PKI) தொடர்பான ஒரு தனி டெண்டர் செயல்முறை தற்போது ஆய்வில் இருப்பதாகவும், தேர்வு முறை குறித்து ஒரு நிறுவனம் மேல்முறையீட்டு குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.'

அமைச்சரவை இருப்பினும் இந்த விவகாரத்தை கொள்முதல் ஆணைக்குழுவின் பார்வையிட அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையான முறையில் கையாளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |