இலங்கையில் நிலைமை இன்னும் மோசமாகும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேட்டி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலைமை சீரடைவதற்கு முன்னர் இன்னும் மோசமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்று பின் தனது முதல் நேர்காணில் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, தினமும் குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன்.
உலக நாடுகளிடம் கூடுதல் நிதியுதவி கோரிய ரணில், நாட்டில் பசி நெருக்கடி இருக்காது, நாங்கள் உணவை பற்றாக்குறை ஏற்படாத வகையில் செயல்படுவோம்.
இலங்கையின் பொருளாதாரம் உடைந்துவிட்டது, ஆனால், இலங்கையர்கள் பொறுமை காக்குமாறு அறிவுறுத்தியுள்ள ரணில், அனைத்தையும் நான் மீட்டெடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்து வரும் போராட்டாகாரர்களின் உணர்வுகளை நான் ஏற்கிறேன், ஆனால் அது நடக்காது.
பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளர் இறுதிச்சடங்கில் தாக்குதல்.. இஸ்ரேலிய படை வெறிச்செயல்! பரபரப்பு காணொளி
பழி சுமத்துவது நடவடிக்கைக்கு வழிவகுக்காது, ஆரோக்கியமான மக்களைப் பார்க்க நான் வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார்.