நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு!
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் இன்று (21) 10.00 மணி முதல் நாளை (22) காலை 06.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024
இலங்கையில் தற்போது ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
2022 ஆம் ஆண்டில் நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்ப்புக்களில் ஜனாாதிபதி வெளியேற்றப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
எனவே இந்த தேர்தலின் எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
தேர்தல் முடிவிற்கு பின் நாடு முடங்கப்படுமா?
இந்நிலையில் தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்கள் நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |