ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாக்க (Anura Kumara Dissanayake) தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.
இதனடிப்படையில், மக்கள் உட்பட அரசியல் வட்டாரங்களில் உள்ளவர்களும் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாக்க (Anura Kumara Dissanayake) தனது வாக்கை கொழும்பு, பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |