ஜனாதிபதி தேர்தல் 2024: காலை 10 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்று வரையில் தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம்.
50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.
அதில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
காலை 10 மணி நிலவரம்
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மாவட்ட மட்ட வாக்களிப்பு வீதம் பல மாவட்டங்களில் ஏற்கனவே 20 சதவீதத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று (21) காலை 10.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:
- களுத்துறை - 32%
- நுவரெலியா - 30%
- முல்லைத்தீவு - 25%
- வவுனியா - 30%
- இரத்தினபுரி - 20%
- கேகாலை - 15%
- அம்பாறை - 30%
- மன்னார் - 29%
- கம்பஹா - 25%
- கொழும்பு - 20%
- கண்டி - 20%
- காலி - 18%
- மாத்தறை - 30%
- மட்டக்களப்பு - 17%
- குருநாகல் - 30%
- பொலன்னறுவை - 38%
- மொனராகலை - 21%
- பதுளை - 21%
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |