இந்தாண்டு இலங்கை மின்சார துறை பேரிழப்பை சந்திக்கும்: தொழிற்சங்கம் எச்சரிக்கை
இலங்கை மின்சார வாரியம் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்துக்கு எச்சரிக்கை
இலங்கை மின்சார வாரியம் இந்த வருடம் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கலாம் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் எதிர் வரும் நாட்களில் 75% என மின் கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டாலும் இந்த பெருந்தொகை இழப்பு என்பது தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக டீசல் அனல்மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டதே இந்த இழப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய குற்றச்சாட்டு
மேலும் மின்சார உற்பத்திக்கு மூலப் பொருளான நிலக்கரியின் விலை உயர்வு மற்றும் அவற்றை இறக்குமதி செய்யும் கப்பல்களின் தாமதக் கட்டணம் போன்றவையும் இத்தகைய மின்சார துறை இழப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
மின்சாரத் துறையை இத்தகைய இழப்புகளுக்கு உள்ளாக்கி, பின் மின்சார துறையை ஒட்டுமொத்தமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பதை சிலர் தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |