இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி கைது
sri lanka ex first lady Shiranthi Rajapaksa arrested by CIABOC: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ கைது
இலங்கையின் முன்னாள் முதல்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ(Shiranthi Rajapaksa), கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி தனது கண் தொடர்பான சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

கடந்த அக்டோபர் 5 ஆம் திகதி அவர் இலங்கை திரும்பிய நிலையில், கிருலபோனிலுள்ள அவரது வீட்டுக்கு இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் சென்றிருந்தனர்.
சிறிலிய சாவியா நிதியத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குறித்து சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதனையடுத்து, ஷிராந்தி ராஜபக்ஷ CIABOC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதல்பெண்மணியாக இருந்த ஒருவர் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.