விடுதலைக்குப் பிறகும் வாடும் ஈழத்தமிழர்கள் - இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் நேர்காணல்
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் 26 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது நீக்கப்பட்டு 4 பேருக்கு தான் தூக்குதண்டனை இருந்தது.
26 நபர்களில் 13 பேர் இந்தியர்கள், 13 பேர் ஈழ தமிழர்கள். அதிலும் 4 பேரை தவிர எஞ்சிய 9 ஈழ தமிழர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
அதனை எதிர்த்து மனித உரிமைக்குழு ஆணையத்திற்கு சென்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படைகளைக் கோரி, அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறி பின்னர் தான் அந்த 9 பேரும் வெளிநாடுகளுக்கு சென்றனர் என இலங்கையின் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் கூறினார்.
அதேபோல், அத்வானியை நேரில் சந்தித்து பேசியபோது தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது உட்பட பல விடயங்கள் குறித்து அன்றைய கால கட்டத்தில் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |