டி20 உலகக் கோப்பைக்கான இறுதி அணியை அறிவித்தது இலங்கை! நான்கு வீரர்கள் மாற்றம்
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இறுதி அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
வங்க தேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய எட்டு அணிகள் ‘ரவுண்ட் 1’ சுற்றில் பங்கேற்கின்றன.
இதற்கிடையில், சூப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை தேர்வு செய்ய அனுமதி அளித்த ஐசிசி, அணிகளை அறிவிக்க செப்டம்பர் 10ம் திகதி கடைசி நாள் என அறிவித்தது.
இந்நிலையில், இன்று செப்டம்பர் 10ம் திகதி ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கு தசுன் சானக்க தலைமையில் 15 பேர் கொண்ட இறுதி அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக, செப்டமபர் 12ம் திகதி உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்திருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம், இறுதி அணியில் நான்கு வீரர்களை மாற்றியுள்ளது.
செப்டமபர் 12ம் திகதி அறிவிக்கப்பட் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த நுவான் பிரதீப், கமிந்து மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரம, லஹிரு மதுஷங்க ஆகிய நால்வர் இறுதி அணியில் இடம்பெறவில்லை.
The following 15 member final squad was selected by the Cricket Selection Committee to take part in the ICC Men’s #T20WorldCup 2021, which will be played in UAE and Oman from 17th October to 14th November 2021. READ: https://t.co/RfgjaODBwa pic.twitter.com/oEI5UZCdwc
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 10, 2021
அவர்கள் நால்வருக்கு பதிலாக லஹிரு குமார, பாத்தும் நிசங்க, அகில தனஞ்சய மற்றும் பினுரா பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2021 டி20 உலகக் கோப்பைக்கான இறுதி இலங்கை அணி:
- தசுன் சானக்க - கேப்டன்
- தனஞ்சய டி சில்வா - துணை கேப்டன்
- குசல் ஜனித் பெரேரா
- தினேஷ் சந்திமால்
- பானுக ராஜபக்ஷ
- சரித் அசலங்கா
- அவிஷ்கா பெர்னாண்டோ
- பாத்தும் நிசங்க
- வனிந்து ஹசரங்கா
- மகீஷ் தீக்ஷனா
- அகில தனஞ்சய
- சாமிகா கருணாரத்ன
- லஹிரு குமார
- ஷ்மந்த சமீரா
- பினுரா பெர்னாண்டோ