தெற்காசிய கால்பந்து தொடரிலிருந்து முதல் முறையாக சாம்பியன் இலங்கை விலகல்!
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை தொடரில் பங்கேற்காது எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெற்காசிய கால்பந்து கோப்பை
SAFF எனும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை சூன் 21ஆம் திகதி தொடங்குகிறது. ஆனால் இலங்கை இதில் பங்கேற்காது.
சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA சனவரியில் இருந்து இலங்கை கால்பந்து நிர்வாகம் மீது தடை விதித்துள்ளது. அதன் விளைவாகவே முதல் முறையாக தற்போது இலங்கை கால்பந்து அணி SAFF கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
AFC
சாம்பியன் இலங்கை
1993ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. 1995ஆம் ஆண்டில் இலங்கை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தியா 8 முறையும், மாலத்தீவு 2 முறையும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இலங்கை பங்குபெறாத நிலையில் SAFFயில் இல்லாத போதிலும் சிறப்பு அழைப்பு மூலம் இந்த ஆண்டு நடைபெறும் தொடரில் லெபனான், குவைத் அணிகள் விளையாட உள்ளன.
The Papare
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |