இலங்கைக்கு கிடைத்த மற்றொரு மலிங்கா! யார் அவர்? அதே ஸ்டைலில் மிரட்டலாக பந்துவீசும் வீடியோ
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தி வரும் இலங்கை வீரர் மதீஷா பதிரனா குட்டி மலிங்கா என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர் வெற்றிகள் மூலம் இலங்கை அணி எதிரணிகளை மிரள வைத்து வருகிறது.
இத்தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மதிஷா பதிரனா என்ற வேகப்பந்து வீச்சாளர்.
வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் இத்தொடரில் இதுவரையில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும், இலங்கைக்கு மற்றொரு லசித் மலிங்கா கிடைத்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
ஏனெனில் அப்படியே மலிங்கா போலவே அதே ஸ்டைலில் பந்துவீசுகிறார் மதிஷா.
இதையடுத்து அவரை பலரும் குட்டி மலிங்கா என்று அழைக்கின்றனர்.
இருந்த போதிலும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் லசித் மலிங்காவுக்கு நிகர் அவர் தான் என்பதும் பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது.