சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன?

Election Commission of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024 Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Kirthiga Nov 14, 2024 08:06 AM GMT
Report

இலங்கையின் 17.1 மில்லியன் வாக்காளர்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுத்து ஏழு வாரங்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மீண்டும் வாக்குச்சாவடிக்கு சென்று வருகின்றனர்.

சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்

வாக்குப்பதிவு இலங்கை நேரப்படி 07:00 மணிக்கு தொடங்கி 16:00 வரை நீடிக்கும். வாக்கு எண்ணிக்கை மாலையில் தொடங்கி வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

உள்ளூர் நேரப்படி 10 மணி நிலவரப்படி, 20-25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன? | Sri Lanka General Election Whats People Key Issues

நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மீதமுள்ளவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் எனப்படும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்படும். 

"49 அரசியல் கட்சிகள் மற்றும் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,800 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர், ஆனால் சுமார் 1,000 வேட்பாளர்கள் மட்டுமே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தேர்தல் கண்காணிப்பு குழுவான மக்கள் நடவடிக்கைக்கான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன? | Sri Lanka General Election Whats People Key Issues

மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன?

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்று அமைச்சர்களை மாத்திரம் வைத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வந்தன.  

ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.  

சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன? | Sri Lanka General Election Whats People Key Issues

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டும் வந்திருக்கும் இலங்கையில் பொருளாதார மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பது தான் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்று வரையில் கடன் நெருக்கடியில்தான் இருக்கிறது. சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரவிற்குள் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, அந்நிய செலாவணிக் கையிருப்பையும் அதிகரித்தாக வேண்டும்.

இப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.

சூடுபறக்கும் இலங்கை பொதுத்தேர்தல்: மக்களின் முக்கியப் பிரச்சினை என்ன? | Sri Lanka General Election Whats People Key Issues

மேலும் வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.  

வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்ட, அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US