இங்கிலாந்திடம் 2வது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி... ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்தது இலங்கை
இங்கிலாந்திடம் இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வியடைந்ததின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.
இலங்கை இப்போது 428 போட்டிகளிலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் முறையே 427 மற்றும் 414 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன.
1975-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை இலங்கை 860 போட்டிகளில் விளையாடியதுடன் 390 போட்டிகளில் வென்று, 428 தோல்வியடைந்துள்ளது.
வெற்றி / இழப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இலங்கையின் விதிகதம் 0.913 ஆகும். இந்த பட்டியலில் வெற்றி / இழப்பு விகிதம் 1.77 உடன் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.