முழு நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடிய பெங்கல் புயல் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

Sri Lanka Weather Floods In Sri Lanka Cyclone Fengal
By Kirthiga Nov 29, 2024 05:57 AM GMT
Report

நிலவும் சீரற்ற காலநிலையினால் 24 மாவட்டங்களில் உள்ள 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட புதுப்பித்தலின் படி இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணவில்லை மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

முழு நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடிய பெங்கல் புயல் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! | Sri Lanka Heavy Rain Alert Over 441 000 Affected

45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், 12,348 குடும்பங்களைச் சேர்ந்த 38,616 நபர்கள் 347 நியமிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாட்டி வதைக்கும் கனமழை

மகாவலி கங்கை, ஹெடா ஓயா, தெதுரு ஓயா மற்றும் முந்தேனியாறு ஆகிய ஆறுகளுக்கு மேலும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள், மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும்.

கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இன்று மாலை 4.00 மணி வரை சிவப்பு வெளியேற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

  • கண்டி மாவட்டம்: மெடதும்பர, உடதும்பர, உடுநுவர, டோலுவ, பாதஹேவஹெட்ட, ஹரிபத்துவ, பாததும்பர, யட்டிநுவர, டெல்தொட்ட, கங்கவடகோரளை, உடபலத்த
  • கேகாலை மாவட்டம்: அரநாயக்க, மாவனெல்ல, யட்டியந்தோட்டை
  • மாத்தளை மாவட்டம்: உக்குவெல, அம்பங்கங்ககோரலயா, நாவுல, வில்கமுவ, யடவத்த, பல்லேபொல, மாத்தளை, ரத்தோட்ட, லக்கல, பல்லேகம
  • நுவரெலியா மாவட்டம்: வலப்பனை

முழு நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடிய பெங்கல் புயல் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! | Sri Lanka Heavy Rain Alert Over 441 000 Affected

மேலும் ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 3,183 பேர் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

239 படகுகள், 111 வாகனங்கள், 40 டிராக்டர்கள் மற்றும் 64 டிரக்குகள் உள்ளன. ஆறு விமானங்கள் மற்றும் எட்டு ஆளில்லா விமானங்களும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  

முழு நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடிய பெங்கல் புயல் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்! | Sri Lanka Heavy Rain Alert Over 441 000 Affected

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பலத்த மழை குறைவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US