இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: பொலிஸார் வழங்கிய தகவல்
இலங்கையில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் இளம் வயது தாய் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தீ விபத்து
மொனரகல - புத்தல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான இளம் வயது தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில், தீ விபத்தில் சிக்கி 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை துரதிர்ஷ்டவசமாக 26 வயது இளம் தாய் கே.டி. சுராஜே சகுந்தலா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீக்காயமடைந்த கணவர் ஜே.எம். திலுக்ஷா மதுசங்க (29) மற்றும் மகள் ஜே.எம். ஒனல்யா (03) ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
வெல்லவாய நீதவான் பூர்ணா ஷியாமலி தலைமையில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |