இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம்
இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய விசா நடைமுறை
புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான வசதிகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை நவம்பர் 27, 2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் (2360/24) விபரிக்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படும் e-visa முறையை GBS Technology Service மற்றும் IVS Global Institute ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணைவழி மூலம் விசா பெற நினைப்பவர்கள் www.srilankaevisa.lk இந்த தளத்தின் ஊடாக சென்றுப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இணையவழி மூலம் விசா பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகம் செய்வதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மற்றும் முதலீட்டாளர்களின் கவர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு அன்னிய செலவாணி முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் முகமாக இருக்கும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |