இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பணவீக்கம்: நெருக்கடியில் மக்கள்
இலங்கையில் பணவீக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (CCPI) அடிப்படையாகக் கொண்டு இந்த பணவீக்கமானது கணக்கிடப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின் படி, ஒட்டுமொத்த பணவீக்கம் (Overall Inflation)

2026 மார்ச்: 2.2% 2026 பிப்ரவரி: 1.6% (பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.)
உணவுப் பணவீக்கம் 2026 மார்ச்: 0.7%
2026 பிப்ரவரி: 0.2%
உணவு அல்லாத பணவீக்கம் 2026 மார்ச்: 2.9%
2026 பிப்ரவரி: 2.3%
உணவு மற்றும் உணவு அல்லாத ஆகிய இரண்டு துறைகளிலும் கடந்த பிப்ரவரியை விட மார்ச் மாதத்தில் விலையேற்றம் கண்டு இருப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.6% இலிருந்து 2.2% ஆக உயர்ந்து இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |