இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை - இரண்டு தரப்பிலும் பேச்சு
இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை
இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிசக்தி துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி பேச்சுவார்ததை நடாத்தியுள்ளார்.
கடற்றொழில் பிரச்சினை
இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால தீர்வின் முக்கியத்துவத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், வடக்குக் கடலில் நடந்து வரும் கடற்றொழில் பிரச்சினைகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        