இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்: 34 வயதுடையவர் படுகாயம்
இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாத்தறை - மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு
இலங்கையில் மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நபர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த நபர் உடனடியாக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |