உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4வது அணி எது? இலங்கையின் கையில் காத்திருக்கும் முடிவு
2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் களமிறங்க போகும் 4வது அணி எது என்பது இன்றைய இலங்கை - நியூசிலாந்து போட்டியின் முடிவில் உள்ளது.
உலகக்கோப்பை அரையிறுதி
நடப்பு உலகக்கோப்பை இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு போட்டி நிலவுகிறது.
Getty Images
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், நான்காவது அணி எது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ஏனெனில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 8 புள்ளிகளை கொண்டுள்ளன. மேலும் தனது கடைசி போட்டியில் மூன்று அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இவற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அந்த அணி ரன்ரேட்டில் மற்ற இரு அணிகளை விட பின்தங்கி உள்ளது.
அத்துடன் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை பொறுத்தவரை நியூசிலாந்து ஒரு படி மேலே (ரன்ரேட்) உள்ளது.
நியூசிலாந்து - இலங்கை போட்டி
இந்த நிலையில் தான் இன்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் அரையிறுதி ஏறக்குறைய முடிந்துவிடும்.
ஆனால் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் உயர்ந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். இலங்கை அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் கடைசி போட்டியில் வெற்றியுடன் நாடு திரும்ப முனைப்பு காட்டும்.
எனவே, இலங்கை அணியின் கையில் தான் நியூசிலாந்தின் அரையிறுதி கனவு உள்ளது எனக் கூறலாம்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |