இலங்கையில் தேசிய வரிக்கொள்கை, புதிய சுங்கச் சட்டம் அறிமுகம்
இலங்கை அரசாங்கம் தேசிய வரிக்கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய வரிக்கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 2025 ஆண்டுக்கான அரச பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தியபோது இதனை அறிவித்தார்.
இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி திறனை பாரிய அளவில் மேம்படுத்துவதற்காக, 2025- 2029 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி மேபாட்டு திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், உயர்தர மூலப்பொருட்களை ஏற்றுமதியாளர்கள் எளிதில் பெறுவதற்காக, தேசிய வரிக் கொள்கையின் அடிப்படையில் எளிய, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய கட்டண கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய சுங்கச் சட்டம்
- வணிக நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிக்க புதிய சுங்கச் சட்டம் திருத்தம் செய்யப்படும்.
- வருவாய் திரட்டும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படும்.
- சட்ட விரிவாக்க பணிகள் ஏற்கனவே நடந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த முயற்சிகள் இலங்கையின் ஏற்றுமதி துறையை பலப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sri Lanka National Tariff Policy, Sri Lanka new Customs Act, Sri Lankan President Anura Kumara Dissanayake