ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சூன் 2ஆம் திகதி இந்த தொடர் தொடங்குகிறது.
மூன்று போட்டிகளும் Hambantotaவின் மஹிந்த ராஜபக்ச இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டி சூன் 2ஆம் திகதியும், இரண்டாவது போட்டி சூன் 4ஆம் திகதியும், கடைசி போட்டி சூன் 7ஆம் திகதியும் நடக்கிறது.
இலங்கை அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா கேப்டனாக செயல்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா, ஏஞ்சலோ மேத்யூஸ், வணிந்து ஹசரங்கா உள்ளிட்ட 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணி விபரம்:
- தசுன் ஷனாகா (கேப்டன்)
- குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்)
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- மதீஷா பதிரனா
- வணிந்து ஹசரங்கா
- பதும் நிசங்கா
- திமுத் கருணாரத்னே
- சரித் அசலங்கா
- தனஞ்சய டி சில்வா
- சதீர சமரவிக்ரமா
- சமிகா கருணாரத்னே
- துஷன் ஹேமந்தா
- லஹிரு குமரா
- துஷ்மந்தா சமீரா
- கசுன் ரஜிதா
- மஹீஷ் தீக்ஷணா
? SQUAD ANNOUNCEMENT ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) May 30, 2023
Sri Lanka have named 16-member ODI squad for the first two games of the ODI series vs. Afghanistan, starting on 2nd June! ? #SLvAFG pic.twitter.com/EOx2ioyLgw