லங்கா பிரீமியர் லீக்: நான்கு பற்களை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்
லங்கா பிரீமியர் லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்கும்போது இலங்கை கிரிக்கெட் வீரர் தனது நான்கு பற்களை இழந்தார்.
விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது மிகவும் இயல்பான விடயம். வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத விளையாட்டான கிரிக்கெட்டில் கூட காயங்கள் என்பது அரிதல்ல.
ஆனால், டிசம்பர் 7-ஆம் திகதி, புதன்கிழமை லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஒரு அரிய காயம் ஏற்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் சீசனில், கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலே கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற 4-வது போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சமிக கருணாரத்ன (Chamika Karunaratne) கேட்ச் பிடிக்கும் முயற்சியில் தனது நான்கு பற்களை இழந்தார். கருண்ரத்னே கேட்ச்சை வெற்றிகரமாக பிடித்தார், ஆனால் பந்து அவரது முகத்தில் விழுந்து நான்கு பற்களை உடைத்த பின்னரே பந்தை அவர் கையில் பிடித்தார்.
ஆஃப் சைடில் வட்டத்திற்குள் பீல்டிங் செய்துகொண்டிருந்த சமிகா கேட்ச் பிடிக்க ஓடினார். ஆனால், அவரால் பந்தை சரியாக மதிப்பிட முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
Chamika Karunaratne lost 3-4 teeth while taking this catch. pic.twitter.com/cvB44921yZ
— Johns. (@CricCrazyJohns) December 8, 2022
வாயில் ரத்தத்துடன் கடுமையான வலியில் இருந்த அவர், காலேயில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வினோதமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது.
ஆனால், மறுநாளே (டிசம்பர் 8), கருணாரத்னே தனது இன்ஸ்டாகிராமில் சிறிதளவு புன்னகையுடன், வாயில் முழுமையான பற்களுடன் புகைப்படத்தை வெளியிட்டார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னைப் பற்றிய ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டார், அவரது காயப்பட்ட முகத்தைக் காட்டி, வாயில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய தனக்கு 30 தையல்கள் போடப்பட்டுள்ளதாக விளக்கினார்.
அவர் தனது பதிவில், சரியான சிகிச்சையைப் பெற உதவிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் மீண்டும் தனது போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I am back. pic.twitter.com/j5n4doGjur
— Chamika Karunaratne (@chamikak29) December 8, 2022