அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் விளாசி இலங்கை அணியை காப்பாற்றிய வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கையின் அறிமுக வீரர் மிலன் பிரியானத் ரத்னயாகே அரைசதம் அடித்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணரத்னே (2), நிஷான் மதுஷ்கா (4) இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Chris Woakes doing what Chris Woakes does ?pic.twitter.com/MvF8YYGzqx
— Cricbuzz (@cricbuzz) August 21, 2024
தனஞ்செய டி சில்வா அரைசதம்
பின்னர் வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஓட்டங்கள் எடுக்காமல் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 24 ஓட்டங்களிலும், தினேஷ் சண்டிமல் 17 ஓட்டங்களிலும் வெளியேற இலங்கை அணி 113 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாறியது.
அப்போது அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவுடன் அறிமுக வீரர் மிலன் பிரியானத் ரத்னயாகே (Milan Priyanath Rathnayake) கைகோர்த்தார்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 200 ஓட்டங்களை கடந்தது. அரைசதம் அடித்த தனஞ்செய டி சில்வா 84 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் எடுத்து சோயிப் பஷீர் பந்துவீச்சில் வெளியேறினார்.
Sri Lankan skipper Dhananjaya de Silva scores his 8th fifty-plus score in the last 10 innings of the World Test Championship ???#DhananjayaDeSilva #SriLanka #Tests #Sportskeeda #WTC pic.twitter.com/jwMKLjBIIz
— Sportskeeda (@Sportskeeda) August 21, 2024
மிலன் பிரியானத் அபாரம்
எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிலன் பிரியானத், தனது முதல் டெஸ்டிலேயே அரைசதம் விளாசினார். மிலன் 135 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விஷ்வா பெர்னாண்டோ (13) வெளியேற, இலங்கை அணி 236 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes), சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Milan Rathnayake announces himself on the Test stage with a brilliant maiden fifty (72)! What a start to his career. #ENGvSL pic.twitter.com/w0h1pIFWQ7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 21, 2024
? A solid day @EmiratesOT ?
— England Cricket (@englandcricket) August 21, 2024
Who impressed you most? ?
Match Centre: https://t.co/WlpxJWmDmV#ENGvSL | #EnglandCricket pic.twitter.com/DVpxfuwtEq
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |