யாழில் வீட்டுக்குள் புகுந்து வன்முறை: 2 சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார்
மானிப்பாய்-சண்டிலிப்பையில் வீட்டிற்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2 பேர் கைது
இந்த கைது நடவடிக்கை யாழ் மாவட்ட தலைவர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினரால் நேற்று(23.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது 23 மற்றும் 24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த 2 சந்தேக நபர்களை பொலிஸ் கைது செய்ததுடன் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.
பழிக்கு பழி
பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(24.08.2023) நிதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |