இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் - ஒரே பாடலில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்!
இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி இசையமைத்த பாடலானது Youtubeஇல் 1 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களைப் பெற்றது.
“ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” என்ற பாடல்களை இவர் எழுதி இசையமைத்து தயாரித்து இருந்தார். இந்த பாடலானது பெருமளவில் வைரலாகிய தோடு நல்ல வரவேற்பையும் பெற்றது.
1968 களில் இலங்கையின் முதல் தமிழிசைத்தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷின் மகள் தான் இவர்.
இவர் வெளியிட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடல் தான் பெருமளவில் வெற்றியை பெற்றது. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இலங்கையில் தான் படமாக்கப்பட்டது.
இந்த பாடலை உருவாக்குவதற்கு சென்ற செலவை விட இவருக்கு பெரியளவில் Youtubeஇல் இருந்து பணம் கிடைக்கவில்லை எனவும் நேர்காணலின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசிய மேலதிக தகவல்களை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |